Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே நின்ற லாரியில் பைக் மோதி…2 கல்லூரி மாணவர்கள் பலி

தஞ்சை அருகே நின்ற லாரியில் பைக் மோதி-2 கல்லூரி மாணவர்கள் பலி

தஞ்சாவூர் அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் மீது பைக் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சாவூர் அருகே மஞ்சப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் விஜய் (22). அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் சுதர்சன் (19). கல்லூரி மாணவர்கள். இருவரும் கபாடி வீரர்கள். இந்நிலையில் செங்கிப்பட்டியில் நடந்து வரும் கபாடி போட்டியில் முதல் சுற்றில் பங்கேற்ற பின்னர் இருவரும் நேற்று வீடு திரும்பினர். பின்னர் 2ம் சுற்றில் பங்கேற்பதற்காக ஊரிலிருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரே பைக்கில் இருவரும் புறப்பட்டனர்.

டீ குடித்து விட்டு செங்கிப்பட்டி செல்லலாம் என்று நினைத்த இருவரும் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரம் பகுதியில் வேகமாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பைக் நிலைதடுமாறியதில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் மற்றும் சுதர்சன் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்து நடந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!