Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் மோதி 2 பேர் பலி.. திருச்சி அருகே சோகம்

அரசு பஸ் மோதி 2 பேர் பலி.. திருச்சி அருகே சோகம்

​பெரம்பலூர் புது ஆத்தூர், துறையூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த விஜயகீதா (வயது28) மற்றும் அவரது ஆண் நண்பரான சிறுவாச்சூரைச் சேர்ந்த குணசீலன் ஆகிய இருவரும்,
இருசக்கர வாகனத்தில் கம்பரசம்பேட்டை சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
​அப்போது, எதிரே குடந்தை கோட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்தை, டிரைவர் கிருபாகரன் (வயது27) என்பவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்ஸை ஓட்டி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விட்டது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர் இதையடுத்து அவர்களை
​ உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!