வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
திருச்சி திருவானைக்கோவில் டேங்க் ரோடு பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சக்தி நகரை சேர்ந்த கணேசன் (வயது 68) என்பவரை திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்து 6 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளார். இதேபோன்று காந்தி மார்க்கெட் தர்பார் மேடு மீன் மார்க்கெட் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அசூர் பகுதியை சேர்ந்த தவமணி (21) என்பவரை காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளார் திருச்சி பாலக்கரை மீன் மார்க்கெட் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சங்கிலாண்டபுரத்தை சேர்ந்த முகமது அபுதாஹிர் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று திருச்சி தென்னூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பன்னீர்செல்வம் (வயது 52) என்பவரை தில்லைநகர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளார்
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் 2 முதியவர்கள் சாவு
திருச்சி செப்21- விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆசாரி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65) இவர் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் எதிர்பாராதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற ராஜேந்திரன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதேபோன்று திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 68)இவர் அரியமங்கலம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக முனியாண்டி மீது மோதினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முனியாண்டி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று விடியற் காலை முனியாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த இரண்டு விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாணி வியாபாரியின் தாயிடம் 4 பவுன் நகை பறிப்பு
திருச்சி செப் 21- திருச்சி பாலக்கரை கல்லுக்காரர் தெருவை சேர்ந்தவர் சரவணன் மணிகண்டன் (வயது 50) இவருடைய தாய் நேற்று முன்தினம் வீட்டின் ஜன்னல் பகுதியில் அமர்ந்து கொண்டு செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென்று சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து சரவணன் மணிகண்டன் பாலக்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியிடம் 4 பவுன் நகையை பறித்து கொண்டு சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
தந்தை, 3 மகன்களுக்கு அரிவாள் வெட்டு –5 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி செப்21 திருச்சி பாலக்கரை பசுமடம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு ஜெயராமன், சிவராமன் ஹரிஹரன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.இவர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூன்று 3 பேரும் காஜா பேட்டை மெயின் ரோடு வேம்படி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டு பேசிக்கொண்டுஇருந்தனர். அப்பொழுது அங்கு வந்த கிறிஸ்டோபர், சாரதி, கார்த்தி விக்னேஷ், மணி பாரதி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.அப்பொழுது திடீரென்று இந்த இரண்டு கோஷ்டி இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
பிறகு அனைவரும் கலைந்து சென்று விட்டனர். இந்நிலையில் மீண்டும் கிறிஸ்டோபர் தலைமையில் மேற்கண்ட ஐந்து பேர் சேர்ந்து கொண்டு சிவராமன் விட்டிற்கு சென்று அவரிடம் தகராறு ஈடுபட்டு சிவராமன்,ஹரிஹரன், ஜெயராமன், துரைராஜ் ஆகிய 4 பேரை அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிவராமன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
