Skip to content
Home » டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

  • by Senthil

திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ளது. இங்கு உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு  மற்றும் தனியார் பேருந்துகள்  வந்து செல்கின்றன. இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரவும், பகலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி வரும் பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் காரணமாக பஸ் நிலையம் தற்காலிகமாக 3 இடங்களில் இயங்கும்.

மத்திய பேருந்து நிலையத்திற்குள் அந்தந்த மாவட்ட பேருந்துகள் நிற்கும் இடத்தின் அருகில் பஸ்ஸில் பயணிக்க

வருபவர்கள் தங்களது டூவீலர்களை பஸ் ஏறும் இடத்திலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். மறுபடியும் மறுநாள் மற்றும் இரண்டு நாள் கழித்து கூட தங்களது டூவீலர்களை எடுத்துச் சொல்கிறார்கள். இதனால் பேருந்து நிலையத்தில் பேருந்தை இயக்குவதற்கு டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் பயணிகளிடம் கூறியும் பயணிகள் கேட்பதில் என டிரைவர்கள் புகார் கூறுகின்றனர்.

இதுபோல் நேற்று ஒரு அரசு பஸ் டிரைவரை பயணி ஒருவர் எனது டூவீலரை நீ எப்படி தொடலாம் என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக டிரைவருக்கும் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மத்திய பேருந்து நிலையத்திற்குள்ளும் நுழைவாயிலிலும் திருச்சி மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்திற்குள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளை தவிர மற்றவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று விளம்பர பலகை வைத்துள்ளனர்.

ஆனால் யாரும் இதை  பொருட்படுத்துவதில்லை.  டூவீலர் மட்டுமின்றி சில நேரங்களில் ஆட்டோ, கார்கள்  போன்றவையும் பஸ் நிலையத்திற்குள் புகுந்து மறுபுறம் செல்கின்றன.  அடிக்கடி டிரைவர்களுக்கும்  அந்த வாகன ஓட்டிகளுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடமும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும்  மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பஸ் டிரைவர்கள் புகார் கூறுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளும் போக்குவரத்து துறை அதிகாரிகளும்  இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு , பிரச்சனையை சரி செய்ய வேண்டுமென  போக்குவரத்து ஊழியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!