திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா பொன்மலை ரயில்வே பணிமனை டீசல் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் முதன்மை பணி மேலாளர் அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். பணி மாறுதல் பெற்ற அலுவலகத்திற்கு இன்று முதல் வேலைக்கு செல்வதற்காக இன்று காலை தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்பொழுது அந்த வழியாக, கீழ கல்கண்டார் கோட்டைடையை சேர்ந்த ஞானதேசிகன்(20) என்பவர் ஓட்டி சென்ற பைக் அவர் மீது பலமாக மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மஞ்சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த திருவெறும்பூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.