உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கு திரண்ட திமுக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதி கைதை எதிர்த்துத் தொண்டர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு முன்னேற முயன்றதால், தடுப்புகளை அமைத்துக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருவதால் செங்கிப்பட்டி பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
