Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.07.2025) சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு  முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக மண்டலம் 5 க்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் 22வது வார்டுக்கும், மண்டலம் 1 க்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் 1 மற்றும் 2 வார்டுகளுக்கு ஸ்ரீரங்கம் தேவி மஹாலிலும் முகாம்  நடைபெற்று வருகிறது.

இதில் நகர்புறத்தில் 13 துறைகள் அடங்கிய 43 சேவைகள் தொடர்பான பொதுமக்கள் மனு அளித்தார்கள்.

இம் முகாமை  மேயர் மு. அன்பழகன்  மாநகராட்சி  ஆணையர் . லி.மதுபாலன் , ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இந்த முகாமில்  மாவட்ட வருவாய் அலுவலர்  ர. ராஜலட்சுமி,நகர பொறியாளர்  பி. சிவபாதம், மண்டலத் தலைவர்  விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர் சின்ன கிருஷ்ணன்மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!