உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று ஒரு திருமண கோஷ்டியினர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். காட்டு வழியில் சென்றபோது பஸ்சில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் பஸ் திடீரென தீப்பிடித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு குதித்தனர். சிலர் பஸ்சில் இருந்து குதித்து உயிர் தப்பினர். பலர் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டனர். பஸ்சில் மொத்தம் 30 பேர் இருந்ததாகவும், அதில் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே கருகி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பலர் தீயில் கருகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர்.
உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி
