Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதி நவீன அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் மீது ஈரானே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்த நிலையில், ஹார்மூஸ் அருகே உள்ள ஈரானின் ரேடார் தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவும் தாக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையேயான போரால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் இதில் இறுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு இடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அந்த நாட்டின் மீது நேற்று முன் தினம் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடியாக தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து பதில் தாக்குதலை நடத்தியது. திருப்பி தாக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த பதற்றத்திற்கு நடுவே, அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான அபாச்சி ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஈரான் தாக்கியதால்தான் இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. மேலும் ஈரான் மீது கடும் கோபம் அடைந்த அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “அமெரிக்காவின் அபாச்சி (Apache) ஹெலிகாப்டர், ஈரான் ஏவிய ஒருவழித் தாக்குதல் ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.” என்றார்.

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரு அமெரிக்க விமானிகளும் காயமின்றி உயிர் தப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அதே நேரத்தில் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்து இருந்த நிலையில்தான் அமெரிக்கா தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பல ஈரானிய வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். இந்த தாக்குதல்கள், அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலாக மேற்கொள்ளப்பட்ட “தற்காப்பு நடவடிக்கைகள்” என அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!