பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் நடவடிக்கை ..உதயநிதி உறுதி..

135
Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.

இந்த நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி , தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கோரிக்கை அனைத்தையும் 7ஆம் தேதிக்கு பிறகு நிறைவு செய்வேன். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி அளித்தார்.

முன்னதாக, தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 2௦க்கும் மேற்பட்ட் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த அந்த இளைஞர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY