Skip to content
Home » காதலர் தின சிறப்பு டூடுல்…. கூகுள் வெளியிட்டது

காதலர் தின சிறப்பு டூடுல்…. கூகுள் வெளியிட்டது

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி  வழங்கி உள்ளது.  காதலர்கள் விரும்பி பரிசளிக்கும் ரோஜாப்பூ முதல்  செல்போன் வரை பல்வேறு வகையான பொருட்களுக்கு இன்று தள்ளுபடி விற்பனைநடந்து  வருகிறது.  கூகுள் நிறுவனமும் தன் பங்குக்கு காதலர் தின சிறப்பாக புதிய வகை டூடுல் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம் ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு  வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!