பணி நிரந்தரம் சம்பளம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா தலைமை தாங்கினார். ஏ ஐ டி யு சி மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், திரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலியபெருமாள் முனியம்மாள் ஆனந்தராஜ் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஏ ஐ டி யு சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், வருவாய்த்துறை அலுவலக சங்கம் முன்னாள் துணைத் தலைவர் தர்மாக கருணாநிதி, இடதுசாரி பொது மேடை அரண்மனைப்பாளர் துரை. மதிவாணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ. 15,000 உடனே வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் தொகையை செலுத்தி, புலித்தம் செய்து கட்டப்பட்ட கணக்கு சீட்டை வழங்க வேண்டும். கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், ஓஎச்டி ஆப்பரேட்டர், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தஞ்சை மாநகராட்சியில் கைரேகை வருகை பதிவினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

