Skip to content
Home » விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

விஜய், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது. விஜய் எப்பொழுதும் போல் மிகவும் சார்மிங்காக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். பல  இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் பேசி கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு அவரது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைத்துள்ளார்.  5 நிமிடத்தில் ஆட்சியே மாறுது என்ற வசனமும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் இளசுகளை குத்தாட்டம் போட வைக்கிறது.  ஆராரிரோ  கேட்குதம்மா பாடல்….தாய்க்குலத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் அள்ளுகிறது.   வாரிசு படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன் என அதன் இசை அமைப்பாளர் தமன்  டுவிட்  செய்துள்ளார். இது டிரெண்டாகி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!