திருச்சி, உறையூர் எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் , மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.