இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இருப்பினும், ரியோ ராஜ் நடிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
