Skip to content
Home » விசிக தலைவர் திருமா பிறந்த நாள்….. பெரம்பலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

விசிக தலைவர் திருமா பிறந்த நாள்….. பெரம்பலூரில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

  • by Senthil

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் அவர்களின் 61 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து துறைமங்கலம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் கழகத்தின் கொடி ஏற்றி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. புதிய பேருந்து நிலையத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடைபாதை வியாபாரி சங்கத்தின் பதாகைகள் தொடங்கி வைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வீர செங்கோலன் மேற்கு மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல் சி.தமிழ்மாணிக்கம் மண்டல செயலாளர் பெ.அன்பானந்தம் மண்டல துணை செயலாளர்கள் பெ.லெனின் வழக்கறிஞர் இரா.ஸ்டாலின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா.மன்னர்மன்னன் உட்பட விடுதலை சிறுத்தை கட்சியின் பல கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!