Skip to content
Home » திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

  • by Senthil

திருச்சி  அடுத்த  சிறுகனூரில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம்  மாநாடு நாளை நடக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

திருச்சி சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள 500 மீ அகலம்- 1000மீ நீளத்திற்கு மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடலின் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் என நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் திடலின் பின்புறம்/ பக்கங்களில் முக்கிய தலைவர்கள்/ கட்சி நிர்வாகிகளுக்காக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநாடு திடலின் பிரதான  நுழைவு வாயில் பழைய  நாடாளுமன்ற கட்டிட வடிவிலும், இருபுறமும் உள்ள பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில்களில் திருமாவளவன், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோருடன் புத்தர் இடம்பெற்றுள்ளார். நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ளே நுழையும் தொண்டர்களை பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் சிலையும் வரவேற்கும்.

தலைவர்கள் உரையாற்றும் மேடை புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 அடி நீளத்திலும் 50 அடி உயரத்திலும் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் மேடையின் பக்கங்களில்

அமைக்கப்பட்டு, தலைவர்களின் ஒளிக்காட்சிகள் / பிற காட்சிகள் தொண்டர்களுக்கு காண்பிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!