Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பைக்கில் 3 பேர் பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்-எஸ்.பி. எச்சரிக்கை!

பைக்கில் 3 பேர் பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்-எஸ்.பி. எச்சரிக்கை!

இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணித்தால், சம்பந்தப்பட்டவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், பொதுமக்கள் எவ்விதப் போக்குவரத்து நெரிசலுமின்றி பாதுகாப்பாகப் பயணம் செய்யவும் காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தைச் சாலை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில், முக்கிய இடங்களில் தடுப்புகள் (பேரிகேட்) அமைத்தல், கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தல் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link