Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் விஜய் தமிழக அரசியலுக்கு பதில் சீனாவில் களமிறங்கலாம்… நல்லசாமி பேட்டி..

நடிகர் விஜய் பேராற்றல் கொண்டவர், அவர் தமிழக அரசியலில் களமிறங்குவதற்கு பதிலாக, சீன எல்லையில் களமிறங்க வேண்டும் என கரூரில் தமிழ்நாடுகள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.

தமிழ்நாடுகள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது….

கீழ்பவானி கால்வாய் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் முடிவடைகிறது. தமிழக நீர்வளத்துறை செயல்படுத்த உள்ள கான்கிரீட் கால்வாய் கட்டுமானத் திட்டத்தை கைவிட வேண்டும். மண் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக ஒருவேளை மாற்றினால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.

நடிகர் விஜய் பேராற்றல் கொண்டவர். சினிமாவில் அவர் ஒரு காலை தூக்கினால் 200 பேரும், இன்னொரு காலை தூக்கினால் 200 பேரும் பறக்கின்றனர். அவர் தமிழ்நாடு அரசியலில் களம் இறங்குவதற்கு பதிலாக, சீன எல்லையில் களம் இறங்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!