முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக தொண்டர்கள் மட்டுமே பிரகடனம் செய்து வருவதாகவும், இதனை ஒரு கட்சியின் அரசியல் நிலைப்பாடாக பார்க்க தேவையில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு கட்சி தலைவரை வருங்கால முதல்வர் அல்லது பிரதமர் என கூறுவது தொண்டர்களின் இயல்பான எதிர்பார்ப்புகளில் ஒன்று மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவகாசம் இருப்பதால், இப்போதே பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவது பொருத்தமானது அல்ல என்றும் அவர் பேசியுள்ளார்.
விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது அரசியல் நிலைப்பாடு இல்லை-திருமா.,
