இந்திய கலாச்சார ஆடைகளில் முன்னணி பிராண்டாக திகழும் ராம்ராஜ் காட்டன், திருமணம் மற்றும் சுபவிழாக்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆடைத் தொகுப்பின் பிராண்ட் அம்பாசிடராக முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவை இணைத்துள்ளது. இந்திய கலாச்சார ஆடைகளின் செழுமையையும், சமகால தலைமுறையின் ரசனை மற்றும் நவீன ஸ்டைலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ராம்ராஜ்-ன் Lagnaa பிரத்யேக தூயப்பட்டு திருமண ஆடைத் தொகுப்பை, இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விஜய் தேவரகொண்டா இந்த பிரசாரத்தின் முகமாக இணைந்துள்ளார்.
ராம்ராஜ்-ன் Lagnaa பிரத்யேக தூயப்பட்டு திருமண ஆடைத் தொகுப்பு, உயர்தரத் தூய பட்டு வேட்டிகள், பட்டுச் சட்டைகள் மற்றும் அங்கவஸ்திரங்கள் உள்ளிட்ட பிரத்யேகமான திருமண மற்றும் பண்டிகைக்கால ஆடைகளை உள்ளடக்கியது. இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறுகையில், தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் contemporary style ஆகியவற்றை இயல்பாக பிரதிபலிக்கும் விஜய் தேவரகொண்டா, இந்த மதிப்புகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம்ராஜ் காட்டனின் பிரத்யேக தூயப்பட்டு திருமண ஆடைத் தொகுப்பின் முகமாக அவரை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
நிர்வாக இயக்குநர், பி.ஆர்.அருண் ஈஸ்வர் கூறுகையில், இன்றைய இளைஞர்களின் தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் உணர்வை பிரதிபலிக்க விஜய் தேவரகொண்டாவை விட சிறந்த ஆளுமை இருக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். அவரை ராம்ராஜ் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். ராம்ராஜ் காட்டனின் பிரத்யேக தூயப்பட்டு திருமண ஆடைத் தொகுப்பில் இடம்பெறும் உயர்ரக தூயப்பட்டு வேட்டிகள், சட்டைகள் மற்றும் பிற திருமண மற்றும் சுபவிழா ஆடைகள், ராம்ராஜ் காட்டனின் பிரத்யேக கடைகள், முன்னணி ஜவுளிக் கடைகள் மற்றும் www.ramrajcotton.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
