புதிய உள்துறை செயலாளராக கார்த்திக் நியமனம்.
உள்துறை செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமனம்.
தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறை செயலாளராக நியமனம்.
மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம்.
நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமனம்.
நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்; மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம்.
செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம்.
குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம்.
