Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் எங்களுக்கு பொருட்டே இல்லை…நயினார்

ஈரோடு வில்லரசம்பட்டியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: தொகுதி மறுவரையறை சட்டம் என்பது வரவேற்கதக்கது. திமுக அரசு எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு மாற்றங்கள் தேவை. பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

அனைத்து மாநிலங்களிலும் சீராக தான் இருக்கும். இந்த சட்டமன்ற தேர்தலில் என்டிஏவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. தவெக தலைவர் விஜயெல்லாம் எங்களுக்கு பொருட்டே இல்லை. அவர் எப்படி தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் கவலையில்லை. ஆளும்கட்சியாக வர முடியாத விஜய் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!