Skip to content
Home » விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை இன்று அறிவித்தார். இதையடுத்து தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4-ரோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தமிழ் பாபு

தலைமை தாங்கினார். நகர தலைவர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருண்சாமி மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரன், மாணிக்க கந்தன், எழில் விமலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!