Skip to content
Home » விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!….

விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!….

நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அரசியலில் ஒரு துணிச்சலான, தைரியசாலியை இழந்துவிட்டோம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

ஏனென்றால், ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் காலத்திலேயே அரசியல் களம் கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இதனால், அவரது அரசியல் பயணம் பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. இருப்பினும், சமீப காலமாக விஜயகாந்துக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், அரசியலில் சற்று விலகியே இருந்தார்.

அவ்வபோது, தொண்டர்களை சந்திப்பது என இருந்து வந்த விஜயகாந்த், சமீபத்தில் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது, அவரை பார்க்கும்போது மனம் வருந்தியது. இதையடுத்து உடல்நல குறைவால் விஜயகாந்த் காலமானார். இவரது பிரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் (டிவிட்டர்) கணக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, விஜயகாந்தின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை மாற்றியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்து சில நாட்களிலேயே அவரின் சமூக வலைதள கணக்கின் பெயர் நீக்கப்பட்டு அவரின் மனைவி பிரேமலதா பெயருக்கு அந்த கணக்கு மொத்தமாக மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பேசும்பொருளாக மாறியுள்ளது. விஜயகாந்தின் கணக்கிற்கு 2 லட்சத்து 33 ஆயிரத்திற்கு 750 பின்தொடர்பாளர்கள் இருந்தனர். இப்போது அந்த கணக்கை அவரின் மனைவி பயன்படுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!