Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி இடைத்தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

கரூர் மாநகர திமுக செயலாளர் எஸ்.பி கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!