தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு ஓவியா மனோஜ் திருமணத்தினை முதல்வர் ஸ்டாலின் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர் . பின்பு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு என்பது இதோடு முடிவதில்லை வாழையடி வாழையாக தொடரும். நேற்று இரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எல்லோரும் பாராட்டும் வகையில் முடித்துவிட்டு தான் நான் வந்துள்ளேன். இன்றைக்கு சமூக வலைதளங்களில்

ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும் போது கையை எடுத்து ஒரு ஆக்சனோடு செல்வேன் அது நான் திட்டமிட்டு செய்தது கிடையாது. காரில் ஏற வரும்போது எதிரே இருக்கும் பத்திரிக்கையாளர்களை பார்த்து பேச்சுவார்த்தை முடிந்தது என்று கூறினேன். அவ்வளவுதான் அது இன்றைக்கு ஒரு பேசு பொருளாகி வருகிறது. அதுமட்டுமல்ல இந்த திருமணத்தை முடித்துவிட்டு நாடாளுமன்ற மேலவைக்கு இருவரை அறிவித்துள்ளோம் கூட்டணி கட்சிக்கு இரண்டு இடங்களை கொடுத்துள்ளோம் அந்த நான்கு பேரும் 12 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

அதற்கு செல்ல வேண்டிய காரணத்தினால் தான் நான் விரைந்து வந்து திருமணத்தை முடித்துவிட்டு விரைந்து செல்கிறேன். காதல் திருமணம் என்று கூறினார்கள் அது மட்டுமல்ல பெண்ணின் தாயார் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் அவரது சகோதரர் சின்ன உதயாவிற்கும் காதல் திருமணம் தான் அதற்கும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை பிடிவாதமாக இருந்தார். நாங்கள் சொன்னோம் அவர் கேட்டுக்கொள்வார் என பேசினார்.
