விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். என்று சட்டமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருத்தாசலம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், அண்மையில் நிகழ்ந்த அமோனியா கசிவு விபத்து தமிழகத்தின் துயரமான நாளாக அமைந்ததாகவும், இதில் உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகவே குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்ய, அரசு சார்பில் பிரத்யேக கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அமோனியா கசிவு காரணமாக நிகழ்ந்த விபத்து, தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் வகையில், அவர்கள் நினைவாக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தியிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் புதிய முதல்வர்கள் நட்பு ரீதியாகப் பேசி சுமூகமான தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
