Skip to content
Home » விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடத்திவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.  மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிஸ் சிட்டி ஸ்டூடியோவில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு  படப்பிடிப்பு தளத்தில், லாரி சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி நிற்காமல் சென்று செட் மீது மோதியது. இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என்றும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!