தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்துள்ளது என ஆதவ் அர்ஜூனா பேட்டியளித்தார். தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு அளித்துள்ளது. அனைத்து தோழமை கட்சிகளுக்கும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், என்னுடைய ஆசான் அண்ணன் திருமா அவர்களுக்கும் விசிக அனைத்து தோழர்களுக்கும் எங்களுடைய நன்றி.

ஜனநாயகம் காக்கப்படும். மக்களுடைய ஆதரவுடன் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் உருவாகுவார்கள் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். கவர்னர் அர்லேகரை மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விசிக தலைவர்களுடன் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
