Skip to content
Home » 100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

  • by Senthil

தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா 1 ரன்னிலும், லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து வார்னர், ஸ்மித் இணை நேர்த்தியாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை அடித்து அசத்தினார்.

மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேற்கொண்டு தொடர்ந்து பேட்டிங் ஆடிய டேவிட் வார்னர் சத்ததை இரட்டை சதமான மாற்றினார். இதன் மூலம் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த வார்னர் அதை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டை சதத்தை வார்னர் அடித்துள்ளார். மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!