Skip to content
Home » தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

  • by Senthil

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி தனது பத்து வயதான மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறுமி நிலைத்தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. இந்த விபத்தில் அந்த சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்த தாய் கீர்த்தி கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல செய்திகள், புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தாய் கண் முன்னே மகள் லாரியில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தலைமைறைவான லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விபத்து நடந்ததும் தண்ணி லாரி ஓட்டுநர் டேவி ராஜன் மாயமானார். இந்த நிலையில், டேவிட் ராஜனை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!