தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், கும்பக்கரை அருவியில் நீராடி செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. இந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு அருவியில் நீர்வரத்து சீராகியுள்ளது. 4 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
