கரூரில் ஆயுத பூஜை விழா – தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு வழிபாடு
கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு, மாநகராட்சி மண்டலம் 3 துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, தூய்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மாலை

அணிவித்து, வாழைத் தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர்.
தொடர்ந்து, சுவாமி படங்களுக்கு மலர்கள் தூவி, பழங்கள் மற்றும் பொறி உள்ளிட்ட பூஜைப்

பொருட்களைப் படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.
இதில், தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்

வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு மரியாதை செலுத்தி, சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
