திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்த தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக தற்காலிக ஊழியர் அறிவுமணி என்பவரைப் போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பிறகு எவ்வித சந்தேகமும் வராதவாறு, காவல்துறையினருடன் சேர்ந்துகொண்டு குற்றவாளியைத் தேடுவது போல அறிவுமணி நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
நகைக்காக பெண் இரும்பு ராடால் அடித்து கொலை
