Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள். பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு தெளிக்கும் நாகை விவசாயிகள் . கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை.
படக்காட்சி :-தண்ணீர் இன்றி வரண்டு கிடக்கும் பயிர்கள் குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்.

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவேரி பாசன பகுதிகளுக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் இதனால் குருவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி வளராமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்

வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள். அருகில் உள்ள குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து இளம் பயிரை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேரடிநேரடி விதைப்பில் ஈடுபட்டு ஒரு மாத காலமான நிலையில் பயிர்கள் வளர்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பயிரை காப்பாற்ற உடனடியாக முறையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!