மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 18,875 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆக.7) 13,674 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.57 அடியாகவும், நீர் இருப்பு 39.57 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
