Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்-நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளுவதற்கு எட்வர்ட் என்பவரிடம் நீர்வளத்துறை பணி ஆய்வாளர் .லோகநாதன் ரூ.4000/- லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட் அதுதொடர்பாக 28.10.2026 அன்று திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளார். திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், .சக்திவேல் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது புகார்தாரர் எட்வர்டிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.4000த்தை புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் லோகநாதன், கேட்டு பணத்தை பெற்று வைத்திருந்தார். அப்போது கையும் களவுமாக பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீர்வளத்துறை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 உதவி பொறியாளர் அலுவலகத்தில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!