Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓய்வு எப்போது? டோனி பேட்டி

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில்  டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது:

மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது. இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும். அது என்னுடைய உடலுக்கு எளிதானதாக இருக்காது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8  மாதம் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!