Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய கட்டிடம் எப்போது?கறம்பக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் அவதி!

கறம்பக்குடி அருகே புதிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாபட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பாப்பாபட்டி விடுதி, கல்லுமடை காடம்பட்டி, போன்ற பல்வேறு கிராமங்கள் காணப்படுகின்றன. இதில் புதுகை விடுதி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதி பெற்றோர்கள் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் செயல் பட்டு வந்தது. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் மாணவர்கள் தற்போது அரசு வேலைகள் மற்ற துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். இதில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் அருகே புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டதனால் அந்த பள்ளி கட்டிடத்தை அப்படியே விட்டு விட்டனர். குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம்.

புதுகை விடுதி பள்ளி கட்டிடம் தற்போது பழுதடைந்து சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி அருகே அமைந்துள்ள கட்டிடத்தின் வழியாக செல்வோர் ஒருவித பயத்துடனே சென்று வருகின்றனர். புதுகை விடுதியை அனைத்து தரப்பினர் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பெற்றோர்களின் நலன் கருதி, பழுதடைந்து சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விஷ ஜந்துகள் அதிகமாக பரவி காணப்படும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளனர்.

error: Content is protected !!