Skip to content
Home » அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

  • by Senthil

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் இந்தியாவும், அஸ்திரேலியாவும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியில் சுழல்பந்து வீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன்  ஏன் சேர்க்கப்படவில்லை? என்ற கேள்வி ஆட்டம் தொடங்கிய நாள் முதலே இந்த கருத்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்கள் மத்தியில் எழும்பியது.  ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்கும் இந்த கேள்வியை எழுப்பி இருந்தார். இந்தியாவிலும் பலர் கேட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் தனது ட்விட்டரில்  கூறியிருப்பதாவது:

டீம் இந்தியாவிற்கு சில நல்ல தருணங்கள் இருந்தன, ஆனால் அந்த தருணங்கள் விலக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக இருக்கும் அஷ்வின், ஆடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை. அஸ்வின் விலக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் போட்டிக்கு முன்பு குறிப்பிட்டது போல், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை நம்புவதில்லை, அவர்கள் காற்றில் சறுக்குவதைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றின் மாறுபாடுகளை மறைக்க மேற்பரப்பில் இருந்து குதிப்பார்கள். ஆஸ்திரேலியாவின் டாப் 8 பேட்டர்களில் 5 இடது கை வீரர்கள் இருந்ததை மறந்துவிடக் கூடாது. அப்படி இருந்தும் அஷ்வின் இல்லை,’’
என்று அந்த ட்விட்டரில் சச்சின் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது:

பச்சைப்புல் ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின்னர் விளையாட முடியாது என யார் சொன்னது?, ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனுக்கு, பந்து நன்றாக திரும்பி பவுன்சும் ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும் அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இடம் பெற செய்யாமல் இந்திய அணி தவறு செய்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!