விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என தவெக அழைப்பு விடுத்தது. அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தவெகவின் அழைப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவனும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களுடன் நகர்ந்து வரும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) துணைப் பொதுச்செயலாளரும், திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வன்னி அரசு அவர்கள் அமைச்சராகப் போகிறாரா? என்ற விவாதம் மிகத் தீவிரமாக எழுந்துள்ளது.
விசிக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வன்னி அரசு அவர்கள் கட்சியின் மிக முக்கிய மற்றும் தீவிரமான முகமாக இருப்பதால், கூட்டணி அமைச்சரவை அமையும் பட்சத்தில் விசிக சார்பில் அவரது பெயர் அமைச்சர் பதவிக்கான பரிசீலனையில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
