திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் விநாயக மூர்த்தி இவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு, இந்துமதி என்பவருடன், திருமணம் ஆகி 2 பெண் பிள்ளைகள், 1 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இன்று இந்துமதி, வீட்டில் மின்மோட்டார் போட சுவிட்ச் ஆன் செய்த போது, எதிர்பாராவிதமாக, இந்துமதி மீது மின்சாரம் தாக்கியுள்ளது, உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,
அதனை தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் , இந்துமதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
மேலும் வீட்டில் மின்மோட்டார் போட சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கியதில், 3 குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
