Skip to content
Home » கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

  • by Senthil

கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு ரத்தனகிரி மருதாச்சல கோவிலுக்கு கடந்த 31″ம் தேதி சென்றுள்ளார்.

அப்போது அக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பணியாளர்கள் சரிவர பணியாற்றாமலும் பக்தர்களுக்கு உணவளிக்காமல் திமிராகவும் கடுமையாகவும் நடந்து கொண்டதாகவும் கூறி கோவில் இயக்குனருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமர்ந்து கொண்டிருக்கையில் அன்னதானத்திற்கு அங்கிருந்த ஒருவர் அழைத்ததாகவும், பின்னர் அன்னதான கூடத்திற்கு சென்று பார்க்கையில் தினம்தோறும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை இருந்தாகவும், ஆனால் அங்கு பணிபுரியும் பாக்கியலட்சுமி, ரத்தினம் என்ற இரண்டு பெண்கள் பக்தர்களுக்கு முறையாக உணவு பரிமாறாமல், அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

மேலும் அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது என பாக்கியலட்சுமி கூறியதாகவும் இது குறித்து சக பக்தர்கள் கேள்வி எழுப்பும் போது அவர்களிடமும் திமிராக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை ராஜேஷ் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து செயல் அலுவலர்க்கு ஆதாரமாக அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட செயல் அலுவலர் இரண்டு பெண்களும் இரு பெண்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தெரிவித்ததாக தெரிகிறது.

தற்போது ராஜேஷ் எடுத்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

அரசு சார்பில் அன்னதானம் வழங்கவும், பணியாளர்களுக்கு அதற்கான ஊதியமும் அரசாங்கம் வழங்கி வரும் நிலையில் இது போன்று பக்தர்களுக்கு உணவளிக்காமல் திமிராக நடந்து கொள்வோரால் பணியாளர்களை பணியமர்த்த கூடாது எனவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!