Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வேலாகுறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருடைய மனைவி செல்வி (27). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை மாற்றுப்பாதை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த சாலையைக் கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்றுகொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், மதுரையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, இருவரையும் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த செல்வி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சக்திவேலின் தந்தை சோலை துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காரை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, சிவலார்பட்டியைச் சேர்ந்த ரவிகுமார் (43) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!