Skip to content
Home » உலக கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு….. ரோகித் சர்மா சூசகம்

உலக கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு….. ரோகித் சர்மா சூசகம்

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏற்கனவே 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. அதிக முறை ஆசிய கோப்பையை ருசித்த அணியாக இந்தியா வலம் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2-வது முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன.

உலக கோப்பைக்கு முன்பாக அக்சர் படேல் காயத்திலிருந்து குணமடையாமல் போகும் பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஆசிய கோப்பை வென்ற பின் அவர் கூறியதாவது:

Also Read – 8-வது முறையாக சாம்பியனான இந்தியா: வேகப்பந்து வீச்சு குறித்து ரோகித் சர்மா கருத்து சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன். எனவே அவரும் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான வரிசையில் இருக்கிறார். அதே போல் வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார். குறிப்பாக நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்துபவர்களை விரும்புகிறோம். அக்சர் படேல் திடீரென காயத்தை சந்தித்ததால் நாங்கள் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தோம். பெங்களூருவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியில் இருந்த அவர் பிட்டாக இருப்பதால் நாங்கள் உடனடியாக அழைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். உலகக்கோப்பை தொடருக்கான அணியில் வரும் 28ம் தேதி வரை ஐசிசி-யிடம் அனுமதி பெறாமல் மாற்றம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!