Skip to content
Home » இலங்கை பந்து வீச்சை துவம்சம் (438 ரன்) செய்த தெ.ஆப்ரிக்கா…3 பேர் சதமடித்து அசத்தல்…

இலங்கை பந்து வீச்சை துவம்சம் (438 ரன்) செய்த தெ.ஆப்ரிக்கா…3 பேர் சதமடித்து அசத்தல்…

  • by Senthil

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று நடந்த 4-வது போட்டியில் இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம் சதமடித்து அசத்தினர். டி காக் 100, டுசென் 108, மார்க்ரம் 106 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் ஒரே போட்டியில் மூன்று சதமடித்த அணி மற்றும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா. இந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 438 ரன்களை குவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 417 ரன்கள் எடுத்தது உலக கோப்பை போட்டிகளில் அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தென்னாப்பிரிக்கா முறியடித்துள்ளது. மேலும் ஐடன் மார்கரன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரனா, துனித் வெல்லலகே தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!