எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) தளம் இந்தியாவில் ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 3 கோடி பயனர்களைக் கொண்டுள்ள இத்தளத்தில், ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ-யிடம் பயனர்கள் கேட்டபோது, இந்திய அரசின் சட்டதிட்டங்களைப் பின்பற்றி இனி ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்தியப் பயனர்களுக்குக் காட்டப்படாது என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றம் இந்திய இணையப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு
