Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்து காரில் வந்த ஒருவர் சினிமா சூட்டிங்கிற்க்கு பயன்படுத்தபடும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் துப்பாக்கியை காண்பித்து திருநங்கையை  மிரட்டினாராம்.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் சம்பவ இடத்திற்க்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மூவரும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த திலீப் (33)  கிஷோர் (23)
சமீர் (30) என்பதும் யூ டியூப் சேனல் நடிகர்கள், என்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!