Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு தலையில் வெட்டுக்காயுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். நாகராஜன் இறப்பு குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் பஞ்ச பட்டியில் ஆம்புலன்ஸ் வழிமறித்து குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாலாபேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுபவரினால் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். நாகராஜன் மரணம் சந்தேகத்திற்குரியதாக மர்மமான முறையில் இருந்ததால் அவரது உடலை பிரேத

பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நாகராஜனின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் அந்த சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் 35 வயதான நாகராஜின் சந்தேக மரணம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

நாகராஜன் இறப்பு குறித்து லாலாபேட்டை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!